Friday, 2 September 2011

முட்டால் பயன்கள் ஜோதிடர்கள்

ஒரு முறை சென்னை வானொலியில் மூட நம்பிக்கைகள் பற்றி ஒரு சுவையான விவாதம் திருவாளர்கள் சுயமரியாதை வீரர் சி.பி. சிற்றரசுவுக்கும், கலைமகள் ஆசிரியர் கி.வா. ஜெகநாத(ய்யர்) அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது.
தோழர் சி.பி. சிற்றரசு கேட்டார் : “நல்ல காரியங்கள் கெட்ட நேரத்தில் ஏதும் நடக்கக் கூடாது என்றால், நான் ஒரு சந்தேகம் கேட்கிறேன், அதற்குப் பதில் கூறுவீர்களா?” என்றார்.
அவர், ஓ! தாராளமாக என்றார்.
“ஒரு குழந்தை கிணற்றை எட்டிப் பார்க்கிறது, உடனே தவறிப் போய் உள்ளே விழுந்து விட்டது. தாயும், மற்றவர்களும் பதறிக் கூச்சலிட்டனர். நாம் ஓடிப் போய்க் கீழே குதித்து அதனைக் காப்பாற்ற முனைகிறோம். அது நல்ல காரியம் தானே” சிற்றரசு கேட்டார்.
‘ஆம். செய்ய வேண்டியதுதான் இது’. கி.வா.ஜெ. பதில்.
உடனே ஒருவர் குறுக்கிட்டு, “இப்போது கொழுத்த ராகு காலம் - இது கெட்ட நேரம்; இந்தக் கெட்ட நேரத்தில் நல்ல காரியம் செயல்படக் கூடாது என்று கூறிச் சென்றவரைத் தடுத்தால் நியாயமா?’ என்றார். அது கேட்டு நின்று விட்டால், குழந்தையைக் காப்பாற்ற முடியுமா? ஏற்கனவே நீங்கள் கூறிய கருத்தைத் தானே தடுத்தவர் கூறினார். அது எப்படி நியாயமாகும்? அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? என்றவுடன், கி.வா.ஜெ. மிகவும் சங்கடத்துடன் பதில் கூறாது தவிர்த்து மவுனமாகி விட்டார்.
இதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் சோதிடத்தைப் பற்றி விவாதம் நடந்த பொழுது பகுத்தறிவாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சோதிடத் திலகங்கள் (?) சரியான பதிலைக் கூற முடியாமல் சங்கடப்பட்டனர்.
நமது அரசியல் சட்டத்தில் 51-ஏ என்ற பிரிவில் (எச்) என்ற உட்பிரிவில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.ஆனால் நாட்டில் பெரும்பகுதியினர் அறிவியலை வளர்க்காமல், அறிவுக்கு சம்பந்தமே இல்லாத சோதிடத்தில் மூழ்கி அதில் தத்தளித்துக் கொண்டுதான் உள்ளனர்.
உலகின் மாபெரும் கணிதவியலாளர்களில் ஒருவரான டேவிட் ஹில்பெர்ட் என்பவர் “உலகின் பத்து பேரறிவாளர்களைக் கூட்டி அவர்களிடம், தற்போது மிகுந்த மடமை நிறைந்தது எது எனக் கேட்டால், சோதிடரை விட மோசமான முட்டாளைக் காண அவர்களால் இயலாது” என்று குறிப்பிட்டார்.
http://tamilnanbargal.com/node/23881

No comments:

Post a Comment