Friday, 2 September 2011

சோதிடந்தனை இகழ்

சோதிடந்தனை இகழ்!http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/

செப்டம்பர் 11, 2009
அ.நம்பி ஆல்
sth01
மீசைப் பாவலனின் பார்வை விரிந்த பார்வை; பரந்த பார்வை.
எத்தனையோ பொருள்குறித்துப் பாட்டியற்றியவன் மறவாமல் ஆத்திசூடியும் பாடி நமக்குத் தந்திருக்கிறான்.
ஒளவைக் கிழவியின் ஆத்திசூடி பழையது; இந்தப் புரட்சியாளனின் ஆத்திசூடி புதியது.
நூற்றுப்பத்து அறிவுரைகள்; வரிசையாகச் சொல்கிறான்.
அவற்றுள் மூன்று முறை `இகழ்’ என்னும் சொல்லை ஆளுகிறான்.
`இகழ்தல்’ எனில் `மறத்தல்’ என்றும் `அவமதித்தல்’ என்றும் இரு பொருள் கொள்ளலாம்.
பாரதி சொல்லும் மூன்றாவது `இகழ்’: உலுத்தரை இகழ்.
தானும் தன் பெண்டும் தன் பிள்ளையும் எனத் தன்னலம் கருதி வாழ்பவன் கஞ்சன்; அவன்தான் உலுத்தன்.
அவனால் சமுதாயத்துக்கு ஆகும் நன்மையென்ன?
சமுதாயத்தில் அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிடவேண்டும்; மறந்து நம்மிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்.
இரண்டாவது `இகழ்’: பொய்ம்மை இகழ்
பொய்ம்மையால் எந்த நன்மையும் விளைவதில்லை; மாறாகத் தீமையே விளையும்.
எக்காலத்தும் பொய்ம்மையை நாம் பேணுதல் கூடாது.
பொய்ம்மையை மறந்துவிட வேண்டும்; பொய்யர்களையும் மறந்துவிட வேண்டும்.
http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/
மூன்றாவது `இகழ்’: சோதிடந்தனை இகழ்
எள்மூக்கு அளவேனும் உண்மை இல்லாதது சோதிடம்.
முற்றும் எத்துவேலை; முழுக்க ஏமாற்றுவேலை.
சோதிடம் தன்னை நம்புவனைச் சீரழிக்கும்; அவன் குடும்பத்தைச் சீரழிக்கும்; சமுதாயத்தைச் சீரழிக்கும்.
சோதிடத்தை மறந்துவிட வேண்டும்; எந்தக் காரணத்தை முன்னிட்டும் சோதிடத்தில் நம்பிக்கை வைத்தல் கூடாது.
`உலுத்தரை இகழ்’ என்கிறான்; ஏற்றுக்கொள்கிறோம்.
`பொய்ம்மை இகழ்’ என்கிறான்; ஏற்றுக்கொள்கிறோம்.
`சோதிடந்தனை இகழ்’ என்கிறான்; ஏற்றுக்கொள்பவர்கள் நம் சமுதாயத்தில் எத்தனை பேர்?
sth02
சிலையாக நின்றுகொண்டிருக்கும் பாரதி யாரையோ சுட்டிக் காட்டுகிறானே, யாரைச் சுட்டிக் காட்டுகிறான்? யாருக்குக் காட்டுகிறான்?
“காக்கைகளே, குருவிகளே, இதோ இந்த மக்களைப் பாருங்கள்! `சோதிடந்தனை இகழ்’ என்று சொன்னேன். ஆனால் இவர்கள் நாளும் பொழுதும் சோதிடச் சாக்கடையில் விழுந்து புரண்டு அழுந்திக் கிடக்கிறார்கள்! அறிவைத் தொலைத்துவிட்டு உயிர்வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்!” என்று சொல்கிறானோ?
`காக்கை குருவி எங்கள் சாதி,” என்று பாடியவன் அல்லனோ பாரதி?
`உலுத்தரையும் பொய்ம்மையையும் சோதிடத்தையும் பாரதி மறக்கத்தான் சொன்னான்; அவமதிக்கச் சொல்லவில்லை,’ என்று கூற முடியுமோ?
`பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!’
என்று தழலாகச் சீறும் தன்மையன் பாரதி.
நாம் சிந்திக்கவேண்டும்.
http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/
http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/

1 comment:

  1. இந்து மதத்தை பழிக்கனும்னா பாரதி வேணும்.இல்லைனா பாரதி பாப்பான்.

    ReplyDelete