Friday, 2 September 2011

முட்டாள் ஜோதிடம்

புதுமையான முறையில் முட்டாள் ஆக்குவது எப்படி?

http://nanavuhal.wordpress.com/2009/12/30/pookkal/

December 30, 2009
ppj02
சோதிடர்களை அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது.
நல்ல கற்பனை வளம் உள்ளவர்கள் அவர்கள்.
எப்போதும் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டே இருப்பவர்கள்.
மக்களை எப்படி முட்டாள்கள் ஆக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள்.
மக்களை எப்படி ஏமாற்றிப் பணம் பறிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள்.

சோதிடர்களின் இவ்வாறான சிந்தனை வலையில் நாள்தோறும் பலர் சிக்கிப் பலியாகிறார்கள்.
இதோ `ஜோதிட முரசு’ ஒருவரின் புதுமையான சிந்தனை:
மலரை நினைத்து பலனை அறியுங்கள்! 
ppj03 மாமுனிவர்களும் யோகீஸ்வரர்களும் சித்தர்களும் எத்தனையோ வகையான ஆரூட சாஸ்திரங்களை அருளித் தந்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் மலர் ஜோதிடம். 2010-ம் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும், இந்த புத்தாண்டு என்னென்ன பலன்களை வாரி வழங்கப்போகிறது, எந்த விஷயங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். ஜாதகம் உள்ளவர்கள், ஜாதகம் இல்லாதவர்கள், யார் வேண்டுமானாலும் மலர் ஜோதிடம் பார்த்து பலன்களை தெரிந்துகொள்ள முடியும்.
இங்கே 9 மலர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆழ்ந்து யோசிக்காமல் டக்கென்று ஒரு மலரை நினையுங்கள். அதற்கு உண்டான பலன்களை தெரிந்துகொள்ளுங்கள். 2010-ம் ஆண்டு உங்களுக்கு சகல நலன்களும் வளங்களும் ஆரோக்கிய வாழ்வும் தர வாழ்த்துக்கள்!
முனிவர், யோகீஸ்வரர், சித்தர் என்று சோதிடர்கள் சொன்னாலே போதும்; நம்புவதற்குப் பலர் அணியமாக இருப்பார்கள். எந்த முனிவர், எந்த நூல் என்று ஆதாரங்கள் தரத் தேவை இல்லை. நம்புவதற்கு ஆள்கள் இருக்கும்போது ஆதாரங்கள் எதற்கு?
எடுத்துக்காட்டுக்கு ஒரு பலன்: (தாமரை மலர்)
இந்த ஆண்டு ஏற்ற, இறக்கமாக இருக்கும். சகோதர உறவுகளால் காரியங்கள் அனுகூலமாக முடியும். ppj01 பிள்ளைகள் மற்றும் அவர்களது இல்லத்துணை இடையிலான மனக் கசப்புகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக, தெளிவாக இருக்கும். குடும்பத்தினர் புரிந்து நடப்பார்கள். பிரிந்த உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். சுபகாரிய விஷயமாக நண்பர், உறவினரிடம் இருந்து பண உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். மனைவி வகை உறவுகள் ஓடிவந்து உதவுவார்கள். வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகும். மாமனார், மாமியாரால் அனுகூலம் உண்டு. குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். தடைபட்ட கட்டிட வேலைகள் மார்ச் மாதம் தொடங்கும். வேலை தேடுவதற்கு கடும் முயற்சி தேவைப்படும். ஜூன் மாதத்துக்குள் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருக்கும் பங்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் வரும். பணப் புழக்கத்துக்கு ஏற்ப செலவும் அதிகமாகும். உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி, சம்பளம் உயரும். வியாபாரம் செழிப்படையும். நண்பர்களால் தொழில் வளரும்.
பரிகாரம்: பிரதோஷ வழிபாடு செய்யலாம். மரக்கன்றுகள் நடலாம்.
ppj05 `ஜோதிட முரசு’களுக்கு ஓர் ஆலோசனை: 
`புதுமையான பூ ஜோதிடம்’ மட்டும் போதுமா? ஒன்பது கட்டங்களிலும் நயன்தாரா, தமன்னா என ஒன்பது நடிகைகளின் படங்களைப் போட்டுப் `புதுமையான நடிகை ஜோதிடம்’ ஒன்று உருவாக்கலாம். உங்களுக்குப் பேரும் புகழும் பணமும் பெருகும்; ஐயம் வேண்டா. புதுமையான முறைகளில் மக்களை முட்டாள்கள் ஆக்கி நீங்கள் வளம் பல பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!
(குறிப்பு: இந்தப் புதுமையான சோதிடத்தை வெளியிட்டு சமுதாயத்துக்கு அரும்பணி ஆற்றியுள்ள தமிழகத்தின் `தமிழ் முரசு’ மாலை நாளிதழுக்குத் தமிழ்கூறு நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.) 
http://nanavuhal.wordpress.com/2009/12/30/pookkal/
அ. நம்பி
http://nanavuhal.wordpress.com/2009/12/30/pookkal/

No comments:

Post a Comment