Sunday, 4 September 2011

சோதிடத்தை நம்பிக் கெட்டவர்கள்!

http://naannaathigan.blogspot.com
http://naannaathigan.blogspot.com
சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடத்தை முழுமையாக நம்பிக் கொண்டு அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலுக்கும் சோதிடத்தின் வழிகாட்டலோடு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டில் நிறைய பேர் உண்டு!

அப்படி சோதிடத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வு சோதிடர் சொன்னபடி சிறப்பாக அமைந்ததா?


தினமணி நாளிதழில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலம் உங்கள் கையில் என்ற சோதிடப்பகுதி வெளியிடப்படுகிறது. அப்பகுதியில் மக்கள் தங்கள் துன்ப துயரங்களைக் கூறி என் கஷ்டம் தீருமா? நோய் தீருமா? பரிகாரம் உண்டா? திருமணம் நடைபெறுமா? வேலை கிடைக்குமா? என்றெல்லாம் கேட்டு எழுதுகின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்.


பொருத்தம் என்றார் சோதிடர் - தனித்து வாழ்கிறார் பெண்!
சோதிட நம்பிக்கை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கணவரின் சாதகத்தோடு பொருத்தம் பார்த்து, மிகவும் சரியான பொருத்தம் வாழ்வு சிறப்பாக அமையும் 10 பொருத்தத்தில் பத்தும் நன்றாகயிருக்கிறது என்றெல்லாம் சோதிடர் சொல்லிய பிறகு நாள், நட்சத்திரம், லக்கினம் என்றெல்லாம் மங்கலகரமான நேரம் பார்த்து திருமணம் நடைபெற்றது.

http://naannaathigan.blogspot.com
http://naannaathigan.blogspot.com

சில ஆண்டுகளுக்குப் பிறகு அப்பெண் என்னுடைய கஷ்டம் தீருமா என்று கண்ணீர் சிந்தி 6.4.2001-இல் தினமணி சோதிடர் பகுதிக்கு தபால் எழுதியிருக்கிறார்.

அதில் என் கணவரால் பலவிதக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட நான் தற்போது 7 வயது மகனுடன் தனித்து வாழ்ந்து வருகிறேன். என் கஷ்டம் தீருமா? என்று சோதிடரிடம் கேட்டிருக்கிறார்.

அப்பெண்ணின் சாதகத்தை ஆராய்ந்து பார்த்து அவர் வாழ்க்கை சிறப்பாக அமையுமென்றார் சோதிடர்! ஆனால் கணவரால் சித்திரவதைக்குள்ளாகி தனிமையில் கஷ்டப் படுகிறார்!

பொருத்தம் பார்த்த சோதிடரைக் கேட்டால், இதெல்லாம் பூர்வ பாவ புண்ணியத்தால் அல்லது தோஷத்தால் இவ்விதம் நடைபெறுகிறது என்று கூறி தப்பித்துக் கொள்வார்!

பூர்வ பாவ புண்ணியத்தால் எல்லாம் நடக்குமென்றால் பிறகு ஏன் சோதிடம் பார்த்தபோது பொருத்தம் நன்றாக இருக்கிறதென்று சொல்ல வேண்டும்.

சோதிடம் பார்த்துத் திருமணம் செய்து கொண்ட அப்பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக அமையாமல் போனது போல் ஏராளமான பெண்களின் வாழ்க்கையும் அவ்விதம் கஷ்டப்படும் நிலையில் இருக்கக் கூடும்!

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

http://naannaathigan.blogspot.com
http://naannaathigan.blogspot.com
சோதிடப் பொருத்தம் சோகத்தில் முடிந்தது

23.1.2005 ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மணமகன் குருராஜன் தீயில் கருகி பலியானார். மணமகள் ஜெயஸ்ரீ பலத்த தீக்காயங்களுடன் தப்பித்தார். இவ்விபத்தில் 55 பேர் பலியானார்கள்.

இக்கோரவிபத்தால் தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. இந்தக் குடும்பமும் அய்தீக குடும்பந்தான். அய்தீக ஆசாரப்படி மணமக்களின் ஜாதகத்தை துல்லியமாக அலசி ஆராய்ந்து பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து சோதிடர் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த போதே மணப்பந்தல் தீப்பிடித்து மணமகன் பலியாகி, மணமகள் தீக்காயமுற்று உறவினர்கள் 55 பேர் இறந்து விட்டனர். திருமணப் பொருத்தம் பார்த்த சோதிடர் இதற்கு என்ன பதில் கூறுவார்?

தனி மனிதன் வாழ்வையும், துல்லியமாகச் சோதிடத்தில் கூற முடியும் என்று நம்புகிறவர்கள் இதற்கு என்ன காரணம் சொல்லுவார்கள்?

சோதிடக் கணிப்பில் இந்தக் கோர சம்பவம் நடக்குமென்று தெரியாமல் போய்விட்டதா! சோதிடம் நம்பத் தகுந்ததல்ல என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்?

சோதிடத்தை நம்பி கருவைக் கலைத்தார்!
ஒருவருக்குத் திருமணமாகி 4 ஆண்டிற்குப் பின் அவரது மனைவி கருவுற்றார்! கணவர் சோதிடரை அணுகி தனக்குக் குழந்தை பிறந்தால் என் ராசி எப்படி இருக்கும் என்று கேட்டிருக்கிறார். இது முதல் குழந்தை ஆகவே ராசிப்படி உடல் குறைபாடு உள்ளதாகப் பிறக்கும் என்று சோதிடர் சொல்ல அதை நம்பிய கணவர் உடனடியாகக் கருவைக் கலைக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

கருவைக் கலைப்பதில் தவறு ஏற்பட்டு மனைவிக்கு உடல் நலம் பாதித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். சோதித்த மருத்துவர்கள் கர்ப்பப்பை மிகவும் பாதித்திருக்கிறது. அதை எடுத்து விட வேண்டுமென்று கூறி மனைவியின் கர்ப்பப்பையை எடுத்து விட்டார்கள்.

சோதிடர் சொன்னதைக் கேட்டு முட்டாள் தனமாக நடந்து கொண்டதால் இனி குழந்தை பெற முடியாத அளவிற்கு கர்ப்பப்பையை எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இச்செய்தி 22.1.2006 தினத்தந்தி குடும்பமலரில் வந்துள்ளது.

உதாரணத்திற்குத்தான் ஒன்று இரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதுபோன்று சோதிடத்தை நம்பி பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம் உள்ளனர்.

பொருத்தம் பார்த்த இலட்சணம்!
12.11.2006-இல் தினமலரில் வந்த செய்தி. சங்கீதாவின் தந்தை, மகளுக்கு மாப்பிள்ளை தேடினார். சங்கீதாவின் சாதகத்தில் செவ்வாய்தோஷம் இருப்பதாகக் கூறியிருக்கிறார் சோதிடர்!

http://naannaathigan.blogspot.com
http://naannaathigan.blogspot.com

சென்னைக்கு அருகிலுள்ள ஓர் ஊரில் வசதி படைத்த இராசு என்பவரின் சாதகம் சங்கீதாவின் சாதகத்துடன் மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது என்று சோதிடர் சொல்ல திருமணம் பேசி தடபுடலாக நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சங்கீதா பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானார்! சோதிடர் பொருத்தம் பார்த்துச் சொன்ன அந்த மாப்பிள்ளை ஆண்மையில்லாதவர்!

வாழ்க்கையின் நுணுக்கங்களைக் கூட சாதகத்தால் கணித்துச் சொல்ல முடியும் என்று கூறும் சோதிடர்கள் பொருத்தம் பார்த்துச் சொன்ன இலட்சணம் இப்படி!

சங்கீதாவின் வாழ்க்கையைப் போல் சோதிடர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம், ஏராளம்!

http://naannaathigan.blogspot.com
http://naannaathigan.blogspot.com

Friday, 2 September 2011

சாமான் படம் பார்க்கும் ஜோதிடர்கள்

இப்ப எல்லாம் லேப்டாப் ஜோதிடர்கள் அதிகம்


அதிகம்  அவனுங்க லேப்டாப் வாங்கிப்பாத்தா இன்டர் நெட்டில் அடிச்ச கூத்துக்கள் தெரியும்.

இவனுங்க எல்லாம் செருப்பால் அடிக்கனும்.

சோதிடந்தனை இகழ்

சோதிடந்தனை இகழ்!http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/

செப்டம்பர் 11, 2009
அ.நம்பி ஆல்
sth01
மீசைப் பாவலனின் பார்வை விரிந்த பார்வை; பரந்த பார்வை.
எத்தனையோ பொருள்குறித்துப் பாட்டியற்றியவன் மறவாமல் ஆத்திசூடியும் பாடி நமக்குத் தந்திருக்கிறான்.
ஒளவைக் கிழவியின் ஆத்திசூடி பழையது; இந்தப் புரட்சியாளனின் ஆத்திசூடி புதியது.
நூற்றுப்பத்து அறிவுரைகள்; வரிசையாகச் சொல்கிறான்.
அவற்றுள் மூன்று முறை `இகழ்’ என்னும் சொல்லை ஆளுகிறான்.
`இகழ்தல்’ எனில் `மறத்தல்’ என்றும் `அவமதித்தல்’ என்றும் இரு பொருள் கொள்ளலாம்.
பாரதி சொல்லும் மூன்றாவது `இகழ்’: உலுத்தரை இகழ்.
தானும் தன் பெண்டும் தன் பிள்ளையும் எனத் தன்னலம் கருதி வாழ்பவன் கஞ்சன்; அவன்தான் உலுத்தன்.
அவனால் சமுதாயத்துக்கு ஆகும் நன்மையென்ன?
சமுதாயத்தில் அப்படி ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிடவேண்டும்; மறந்து நம்மிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்.
இரண்டாவது `இகழ்’: பொய்ம்மை இகழ்
பொய்ம்மையால் எந்த நன்மையும் விளைவதில்லை; மாறாகத் தீமையே விளையும்.
எக்காலத்தும் பொய்ம்மையை நாம் பேணுதல் கூடாது.
பொய்ம்மையை மறந்துவிட வேண்டும்; பொய்யர்களையும் மறந்துவிட வேண்டும்.
http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/
மூன்றாவது `இகழ்’: சோதிடந்தனை இகழ்
எள்மூக்கு அளவேனும் உண்மை இல்லாதது சோதிடம்.
முற்றும் எத்துவேலை; முழுக்க ஏமாற்றுவேலை.
சோதிடம் தன்னை நம்புவனைச் சீரழிக்கும்; அவன் குடும்பத்தைச் சீரழிக்கும்; சமுதாயத்தைச் சீரழிக்கும்.
சோதிடத்தை மறந்துவிட வேண்டும்; எந்தக் காரணத்தை முன்னிட்டும் சோதிடத்தில் நம்பிக்கை வைத்தல் கூடாது.
`உலுத்தரை இகழ்’ என்கிறான்; ஏற்றுக்கொள்கிறோம்.
`பொய்ம்மை இகழ்’ என்கிறான்; ஏற்றுக்கொள்கிறோம்.
`சோதிடந்தனை இகழ்’ என்கிறான்; ஏற்றுக்கொள்பவர்கள் நம் சமுதாயத்தில் எத்தனை பேர்?
sth02
சிலையாக நின்றுகொண்டிருக்கும் பாரதி யாரையோ சுட்டிக் காட்டுகிறானே, யாரைச் சுட்டிக் காட்டுகிறான்? யாருக்குக் காட்டுகிறான்?
“காக்கைகளே, குருவிகளே, இதோ இந்த மக்களைப் பாருங்கள்! `சோதிடந்தனை இகழ்’ என்று சொன்னேன். ஆனால் இவர்கள் நாளும் பொழுதும் சோதிடச் சாக்கடையில் விழுந்து புரண்டு அழுந்திக் கிடக்கிறார்கள்! அறிவைத் தொலைத்துவிட்டு உயிர்வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்!” என்று சொல்கிறானோ?
`காக்கை குருவி எங்கள் சாதி,” என்று பாடியவன் அல்லனோ பாரதி?
`உலுத்தரையும் பொய்ம்மையையும் சோதிடத்தையும் பாரதி மறக்கத்தான் சொன்னான்; அவமதிக்கச் சொல்லவில்லை,’ என்று கூற முடியுமோ?
`பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!’
என்று தழலாகச் சீறும் தன்மையன் பாரதி.
நாம் சிந்திக்கவேண்டும்.
http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/
http://nanavuhal.wordpress.com/2009/09/11/astrology-bharathi/

முட்டாள் ஜோதிடம்

புதுமையான முறையில் முட்டாள் ஆக்குவது எப்படி?

http://nanavuhal.wordpress.com/2009/12/30/pookkal/

December 30, 2009
ppj02
சோதிடர்களை அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிட்டுவிட இயலாது.
நல்ல கற்பனை வளம் உள்ளவர்கள் அவர்கள்.
எப்போதும் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டே இருப்பவர்கள்.
மக்களை எப்படி முட்டாள்கள் ஆக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள்.
மக்களை எப்படி ஏமாற்றிப் பணம் பறிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள்.

சோதிடர்களின் இவ்வாறான சிந்தனை வலையில் நாள்தோறும் பலர் சிக்கிப் பலியாகிறார்கள்.
இதோ `ஜோதிட முரசு’ ஒருவரின் புதுமையான சிந்தனை:
மலரை நினைத்து பலனை அறியுங்கள்! 
ppj03 மாமுனிவர்களும் யோகீஸ்வரர்களும் சித்தர்களும் எத்தனையோ வகையான ஆரூட சாஸ்திரங்களை அருளித் தந்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் மலர் ஜோதிடம். 2010-ம் ஆண்டு நமக்கு எப்படி இருக்கும், இந்த புத்தாண்டு என்னென்ன பலன்களை வாரி வழங்கப்போகிறது, எந்த விஷயங்களில் நாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். ஜாதகம் உள்ளவர்கள், ஜாதகம் இல்லாதவர்கள், யார் வேண்டுமானாலும் மலர் ஜோதிடம் பார்த்து பலன்களை தெரிந்துகொள்ள முடியும்.
இங்கே 9 மலர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆழ்ந்து யோசிக்காமல் டக்கென்று ஒரு மலரை நினையுங்கள். அதற்கு உண்டான பலன்களை தெரிந்துகொள்ளுங்கள். 2010-ம் ஆண்டு உங்களுக்கு சகல நலன்களும் வளங்களும் ஆரோக்கிய வாழ்வும் தர வாழ்த்துக்கள்!
முனிவர், யோகீஸ்வரர், சித்தர் என்று சோதிடர்கள் சொன்னாலே போதும்; நம்புவதற்குப் பலர் அணியமாக இருப்பார்கள். எந்த முனிவர், எந்த நூல் என்று ஆதாரங்கள் தரத் தேவை இல்லை. நம்புவதற்கு ஆள்கள் இருக்கும்போது ஆதாரங்கள் எதற்கு?
எடுத்துக்காட்டுக்கு ஒரு பலன்: (தாமரை மலர்)
இந்த ஆண்டு ஏற்ற, இறக்கமாக இருக்கும். சகோதர உறவுகளால் காரியங்கள் அனுகூலமாக முடியும். ppj01 பிள்ளைகள் மற்றும் அவர்களது இல்லத்துணை இடையிலான மனக் கசப்புகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். மனம் உற்சாகமாக, தெளிவாக இருக்கும். குடும்பத்தினர் புரிந்து நடப்பார்கள். பிரிந்த உறவுகள் விரும்பி வந்து சேருவார்கள். சுபகாரிய விஷயமாக நண்பர், உறவினரிடம் இருந்து பண உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். மனைவி வகை உறவுகள் ஓடிவந்து உதவுவார்கள். வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகும். மாமனார், மாமியாரால் அனுகூலம் உண்டு. குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். தடைபட்ட கட்டிட வேலைகள் மார்ச் மாதம் தொடங்கும். வேலை தேடுவதற்கு கடும் முயற்சி தேவைப்படும். ஜூன் மாதத்துக்குள் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருக்கும் பங்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் வரும். பணப் புழக்கத்துக்கு ஏற்ப செலவும் அதிகமாகும். உத்யோகத்தில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி, சம்பளம் உயரும். வியாபாரம் செழிப்படையும். நண்பர்களால் தொழில் வளரும்.
பரிகாரம்: பிரதோஷ வழிபாடு செய்யலாம். மரக்கன்றுகள் நடலாம்.
ppj05 `ஜோதிட முரசு’களுக்கு ஓர் ஆலோசனை: 
`புதுமையான பூ ஜோதிடம்’ மட்டும் போதுமா? ஒன்பது கட்டங்களிலும் நயன்தாரா, தமன்னா என ஒன்பது நடிகைகளின் படங்களைப் போட்டுப் `புதுமையான நடிகை ஜோதிடம்’ ஒன்று உருவாக்கலாம். உங்களுக்குப் பேரும் புகழும் பணமும் பெருகும்; ஐயம் வேண்டா. புதுமையான முறைகளில் மக்களை முட்டாள்கள் ஆக்கி நீங்கள் வளம் பல பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!
(குறிப்பு: இந்தப் புதுமையான சோதிடத்தை வெளியிட்டு சமுதாயத்துக்கு அரும்பணி ஆற்றியுள்ள தமிழகத்தின் `தமிழ் முரசு’ மாலை நாளிதழுக்குத் தமிழ்கூறு நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.) 
http://nanavuhal.wordpress.com/2009/12/30/pookkal/
அ. நம்பி
http://nanavuhal.wordpress.com/2009/12/30/pookkal/

ஊரை ஏமாற்றி உலையில் போடும் சோதிடர்கள்

ஊரை ஏமாற்றி உலையில் போடும் சோதிடர்கள்…!

http://nanavuhal.wordpress.com/2009/10/30/poyyum-purattum/

அக்டோபர் 30, 2009
அ.நம்பி ஆல்
nss01
சோதிடர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஓர் எல்லை இல்லாமல் போய்விட்டது.
அவர்களின் பொய்யும் புரட்டும் பித்தலாட்டமும் திருகுதாளமும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
அவர்களை நம்பி அடியோடு கெட்டுச் சீரழிபவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டு இருக்கிறது.
`எவர் எக்கேடு கெட்டாலும் கெடட்டும்; எங்களுக்கு என்ன? எங்களுக்குப் பணம் வந்தால் போதும்’ என்னும் சிந்தனையோடு திட்டமிட்டுச் சமுதாயத்தைக் கெடுக்கிறார்கள்.
இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளிவந்த சோதிடப் பகுதியில் ஒரு வினா:
ast01
பிள்ளைகளின் படிப்பைக் குறித்துக் கவலையுறும் பெற்றோர்கள் அதுபற்றிப் பேசவேண்டுமானால் அவர்கள் பயிலும் பள்ளிக்குச் செல்லவேண்டும். ஆசிரியர்களிடம் கலந்துரையாடவேண்டும்; தேவையெனில் மருத்துவர்களை நாடவேண்டும்.
ஆனால் இந்தத் தந்தையோ சோதிடரிடம் கேட்கிறார்.
`அவனது போக்கில் எப்போது மாற்றம் ஏற்படும்’ என்னும் கேள்விக்குக் கல்வியாளர்களோ மருத்துவர்களோ விடையிறுக்கக்கூடும்.
`10–ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அவன் தேர்ச்சி பெறுவானா’ என்பது அடுத்த கேள்வி; இக்கேள்விக்கு யாராலும் விடை சொல்ல முடியுமா?
`பரிகாரம் ஏதும் செய்யவேண்டுமா’ என்பது இன்னொரு கேள்வி.
கண்டிப்பாகப் `பரிகாரம்’ செய்யவேண்டும்; `என்ன செய்யவேண்டும்’ என்று சொல்லத் தகுதி உடையவர்கள் கல்வியாளர்களும் மருத்துவர்களுமே ஆவர்.
எல்லாக் கேள்விகளுக்கும் சோதிடப் புரட்டர் விடை சொல்கிறார்:
ast06
`இந்தப் பிள்ளையின் படிப்புப் பிரச்சினைக்குக் கோள்களே காரணம்; கோள்கள் இடம் மாறும்போது பிரச்சினை தானே நீங்கிவிடும்’ என்கிறார் சோதிடர்.
என்ன மேற்படிப்புப் படிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்; இதனைச் சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
`உங்கள் மகனின் வருங்காலம் குறித்துப் பெரிதாகக் கவலைப்பட ஏதுமில்லை’ என்றால் என்ன பொருள்? `என்னை நம்புங்கள்; அவன் படிப்புக் குறித்து ஏதும் சிந்திக்கத் தேவையில்லை; அவன் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகட்டும்’ என்றுதானே பொருளாகிறது?
பெண்மணி ஒருவர் கேட்கிறார்:
ast04
மருத்துவரைக் காணவேண்டும்; அவரைக் கேட்கவேண்டும்; ஆனால் சோதிடரைக் கேட்கிறார்.
சோதிடர் சொல்கிறார்:
ast05
`அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு தீரும்’ என்றால் என்ன பொருள்?
`கோள்களின் இருப்பால் நோய் வந்துள்ளது; அடுத்த ஆண்டு மேத் திங்களுக்குப் பிறகு கோள்களின் நிலை மாறும்; நோய் தீரும்; அப்போதுதான் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்’ என்றுதானே சொல்கிறார்?
`இன்னும் ஏழு திங்கள் நோயில் துன்புற்றுத்தான் ஆகவேண்டும்; மருத்துவம் செய்துகொண்டாலும் நோய் தீராது’ என்று பொய் சொல்லி ஏமாற்றலாமா?
மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

இது பட்டினத்தார் பாடல்.
கண்காட்டும் வேசியருக்கும் சோதிடர்களுக்கும் என்ன வேறுபாடு?
இந்தச் சோதிட வேசியரின் ஏமாற்று வலையில் சிக்கினால் அங்காடி நாய்போல் அலைய நேரிடுவது திண்ணம்; தவிர்க்க இயலாது.
சிக்கிக்கொள்ளாது இருப்பதே அறிவுடைமைக்குச் சான்றாகும். 
http://nanavuhal.wordpress.com/2009/10/30/poyyum-purattum/

சோதிடக் குற்றவாளிகள்…!

சோதிடக் குற்றவாளிகள்…!

அக்டோபர் 13, 2009
அ.நம்பி ஆல்
hc02
`சமுதாயம் உருப்படவே கூடாது’ என உறுதிபூண்டு செயல்படுகிறார்கள் சோதிடர்கள்.
தங்கள் வருமானத்துக்காகச் சமுதாயத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவர் ஆக்குகிறார்கள்.
சமுதாயத்தின் அறியாமையே இவர்களின் முதலீடு.
முதலீடு கூடினால் வருமானமும் கூடும்.
அதனால் அறியாமையைப் பெருக்குவதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்படுகிறார்கள்.
எத்தனை வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் கைக்கொண்டு சமுதாயத்தில் அறியாமையை வளர்க்கிறார்கள்.
அறியாமை வளர வளர இவர்களுக்கு வருமானமும் பெருகும்.
ஒரு நாளிதழில் நேற்று வெளிவந்த சோதிடப் பகுதிக்கு இப்படி ஒரு தலைப்பு:
apt02
`கிரகங்கள் பலவீனம்’ என்றும் `ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்து’ என்றும் மிகப் பெரிய எழுத்தில் தலைப்புக் கொடுப்பதன் நோக்கம் என்ன?
படிப்பவர்களை அச்சுறுத்தும் வேலை இது.
சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அச்சம் தோன்றக்கூடும்.
அடுத்து இப்படி ஒரு வரி:
apt03
`உங்களுக்கு ஆபத்து விளையப்போகிறது; எங்களிடம் வாருங்கள்; பணம் கொடுங்கள். பரிகாரம் சொல்கிறோம்; செய்கிறோம்; ஆபத்து நீங்கிவிடும்!’
இதுதானே பொருள்?
ஏமாற்றிப் பணம் பறித்த சோதிடர்கள் இப்போது அச்சுறுத்திப் பணம் பறிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
apt01
எந்த நாடாயினும் அச்சுறுத்திப் பணம் பறித்தல் (blackmail) என்பது குற்றச் செயலே ஆகும்.
அச்சுறுத்திப் பணம் பறிப்பவர்கள் குற்றவாளிகளே (criminals) ஆவார்கள்.
இத்தகைய செயல்களில் ஈடுபடும் சோதிடர்களைக் காவல் துறையினர்  சிறைசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.
இவ்வாறு நடப்பதற்கு இன்னும் ஏழு தலைமுறைகள் காத்திருக்க வேண்டுமோ? 

http://nanavuhal.wordpress.com/2009/10/13/criminals/

சோதிடம் தவறு

செவ்வாய் தோசமுள்ள ஒருபெண்ணுக்கு செவ்வாய் தோசமுள்ள வரனே வேண்டுமென்று தேடிப் பிடித்து மணமுடித்தனர். இருந்தும் அவள் கணவன் உயிரிழக்க நேர்ந்தது. இந்த உண்மைச்சம்பவம் என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது. அப்போது என்மனதில் தோன்றிய ஒரு சமுதாய வெறுப்புணர்வை எழுதித்தீர்த்தேன்...
இக்கவிதை எழுதப்பட்ட ஆண்டு 2000.

இருட்டுக்குப் பசி என்று அந்திமாலைச் சூரியனை விழுங்கியது.
பொறுப்பற்ற சோதிடனின் புலம்பல் குறி தவறியது.
தாவரச் சாதியெல்லாம் சாவதற்குப் போகிறது!
ஒளிச்சேர்க்கையே தவறுகையில் வெளிச்சேர்க்கை எதற்கு?
செவ்வாயில் தோசமென்றீர் தோசமுள்ள வரன்பிடித்தீர்
எவ்வாயில் சொன்னீரோ அவ்வாயாலாயே விதி என்றீர்.
பெண்மயில் கலங்குவதால் மனம் கொஞ்சம் வலிக்கிறது!
சோதிடத்தை வைத்தெரிக்க தணல் பறக்கும் அடுப்புவேண்டும்!
மானுடத்தை மகிழவைக்கும் மானம்காக்கும் உடுப்புவேண்டும்!